யாழ். மாநகரில் சுமார் 70 வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனையவைகளை மீளத் திறக்க அனுமதிப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 7, 2021

யாழ். மாநகரில் சுமார் 70 வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனையவைகளை மீளத் திறக்க அனுமதிப்பு

யாழ். மாநகர மத்தியில் சுமார் 70 வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனையவைகளை மீள திறப்பதற்கு இன்று (வியாழக்கிழமை) அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையங்களை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மீளத் திறப்பதற்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகர மத்தியில் இருந்த வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்தே சுமார் 70 வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக சுகாதார மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இன்று தொடக்கம் பேருந்து சேவைகளை நடத்த வட பிராந்திய போக்குவரத்து சபைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து சேவைகளும் வழமை போன்று தரிப்பிடங்களிலிருந்து சேவையில் ஈடுபட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பேருந்து சேவைகளிலும் உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை மீறினால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad