வடக்கு மாகாணத்தில் தாதி உள்ளிட்ட 15 பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 27, 2021

வடக்கு மாகாணத்தில் தாதி உள்ளிட்ட 15 பேருக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் புதிதாக 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதாவது யாழ்ப்பாணத்தில் 13 பேருக்கும் மன்னாரில் இருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யதப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “நேற்று (திங்கட்கிழமை), யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 249 பேரின் மாதிரிகள், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

குறித்த பரிசோதனை முடிவுகளிலேயே 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருவருக்கும் தெல்லிப்பழை வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளி இருவருக்கும் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில், சிகிச்சை பெற்ற மூவருக்கும் சாவகச்சேரி வைத்தியசாலையில் நால்வருக்கும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை மன்னார் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற 2 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment