136 மில்லியனுக்கு அதிகமான பணத்தை வைப்பிலிட்டிருந்த இளைஞர் கைது - News View

Breaking

Post Top Ad

Thursday, April 8, 2021

136 மில்லியனுக்கு அதிகமான பணத்தை வைப்பிலிட்டிருந்த இளைஞர் கைது

(செ.தேன்மொழி)

மொறட்டுவ - இரத்மலானை பகுதியில் 136 மில்லியனுக்கு அதிகமான பணத்தை வைப்பிலிட்டிருந்த வங்கி கணக்கின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ள சந்தேகநபர் தர்மசிறி பெரேராவுக்கு சொந்தமான பணமே இளைஞரின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

குறித்த பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் பல்வேறு குற்றச் செயற்பாடுகளை செய்துவிட்டு, தற்போது வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள தர்மசிறி பெரேரா என்ற சந்தேகநபருக்கு சொந்தமான பணமே இவ்வாறு வைப்பிலிடப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad