ருவன்வெல்லவில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Thursday, April 8, 2021

ருவன்வெல்லவில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

(செ.தேன்மொழி)

ருவன்வெல்ல பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணகல்தெனிய பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போலி நாணயத்தாள்களுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரவிலஹேன பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேக நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து போலி 1000 ரூபாய் நாணயத்தாள்கள் இருண்டு கைப்பற்றப்பட்டுள்ளன.

பண்டிகை காலத்தில் இவ்வாறான போலி நாணயத்தாள் மோசடிகள் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸர் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad