தரை விரிப்புகள் மற்றும் பாதணிகளில் இலங்கை தேசிய கொடி - News View

Breaking

Post Top Ad

Friday, March 12, 2021

தரை விரிப்புகள் மற்றும் பாதணிகளில் இலங்கை தேசிய கொடி

இணையத்தின் ஊடாக பொருட்ளை விற்பனை செய்யும் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்று இலங்கை தேசிய கொடியின் உருவத்துடனான கால் துடைப்பான் மற்றும் பாதணிகளை அதன் இணையத்தளத்தில் விற்பனைக்காக பதிவிட்டுள்ளது.

Amazon இணையத்தளத்திலேயே குறித்த பொருட்கள் விற்பனைக்காக பதிவிடப்பட்டுள்ளது.

குறித்த பொருட்களை இலங்கையர்களும் பெற்றுக் கொள்ளும் வண்ணம் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

12 அமெரிக்க டொலருக்கு குறித்த கால் துடைப்பானை விற்பனைக்கு பதிவிட்டுள்ளதுடன் அதற்கான விநியோக கட்டணமாக 9 டொலர்கள் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பாதணிகள் 20 டொலருக்கு விற்பனைக்காக பதிவிடப்பட்டுள்ளதுடன் அதற்கான விநியோக கட்டணமாக 10 டொலர்கள் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு இலங்கையின் தேசிய கொடியுடனான தரை விரிப்புக்கள் விற்பனை செய்யப்படுகின்றமைக்கு எதிராக பலரும் பல்வேறு கருத்துக்களை சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad