பண்டாரகம, பியகம பிரதேச சபை உறுப்பினர்கள் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 17, 2021

பண்டாரகம, பியகம பிரதேச சபை உறுப்பினர்கள் கைது

எம்.மனோசித்ரா

அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாயொருவரை தாக்கியமை மற்றும் மதுபோதையில் ஹோட்டலொன்றினுள் நுழைந்து தாக்கியமை தொடர்பில் பண்டாரகம மற்றும் பியகம பிரதேச சபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவை தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பண்டாரகம பொலிஸ் பிரிவில் றைகம பிரதேசத்தில் அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாயொருவரை தாக்கியமை தொடர்பில் 44 வயதுடைய பண்டாரகம பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேச சபை உறுப்பினர் பாணந்துரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை பியகம பொலிஸ் பிரிவில் கொட்டுன்ன வீதி, பியகம பிரதேசத்தில் காணப்பட்ட ஹோட்டலொன்றுக்குள் நுழைந்து தாக்கியமை தொடர்பில் 43 வயதுடைய பியகம பிரதேச சபை உறுப்பினரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் மதுபோதையில் இவ்வாறு செயற்பட்டுள்ளமை வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad