கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடற்கூற்று பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 11, 2021

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடற்கூற்று பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

கிளிநொச்சி அம்பாள் குளத்தில் நேற்று சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக உடல்கூற்று பரிசோதனையில் முடிவுகள் தெரிவிக்கின்றது.

அம்பாள் குளத்திலிருந்து பெண்ணொருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இதையடுத்து குறித்த பெண்ணின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதன் முடிவின் அடிப்படையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், பெண் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொலை செய்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மற்றும் விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad