பௌத்த மத தேரர்கள் காத்தான்குடி மீரா ஜும்ஆப்பள்ளி வாயலுக்கு விஜயம் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 20, 2021

பௌத்த மத தேரர்கள் காத்தான்குடி மீரா ஜும்ஆப்பள்ளி வாயலுக்கு விஜயம்

காத்தான்குடிக்கு நேற்று (19) வெள்ளிக்கிழமை வருகை தந்த பௌத்த மத தேரர்கள் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளி வாயலுக்கு சென்று அங்கு இடம்பெற்ற ஜூம்ஆப் பிரசங்கம் ஜூம்ஆத் தொழுகையை அவதானித்தனர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் இலங்கையிலுள்ள புராதனச் சின்னங்களை பாதுகாப்போம் எனும் தொனிப் பொருளில் இவர்கள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந்த பெளத்த தேரர்களுக்கு இப்பள்ளி வாயலில் ஜூம்ஆவை அவதானிப்பதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டதுடன் ஜூம்ஆத் தொழுகைக்காக வந்த போது மக்கள் மத்தியில் இக்குழுவில் வருகை தந்த உதவிக் கல்விப் பணிப்பாளரும் கடுவல, தொரந்தொட்ட இராஜ மகா விகாரையின் கறுவிலக் கொட்டு தம்மதிலக தேரர் உரையாற்றினார்.

இதன்போது தொழுகைக்காக வருகை தந்த மக்கள் தேரர்களுடன் கைலாகு செய்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

காத்தான்குடி உலமா சபை பிரதிநிதிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment