மன்னாரில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ்ஸில் வயோதிபர் ஒருவர் திடீர் மரணம் - News View

Breaking

Post Top Ad

Friday, March 19, 2021

மன்னாரில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ்ஸில் வயோதிபர் ஒருவர் திடீர் மரணம்

மன்னாரில் இருந்து கண்டி நோக்கி இன்று (19) காலை இலங்கை அரச போக்குவரத்து சேவை பேரூந்து ஒன்றில் பயணித்த வயோதிபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து இலங்கை அரச போக்குவரத்து சேவை பேரூந்து ஒன்று இன்று காலை 5.30 மணியளவில் பயணிகளுடன் கண்டி நோக்கி பயணித்துள்ளது. இதன்போது குறித்த பேரூந்தில் குறித்த வயோதிபரும் பயணித்துள்ளார்.

இதன்போது மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியில் குறித்த பேரூந்து சோதனைக்காக நிறுத்தப்பட்டுள்ளது. இதன்போதே குறித்த வயோதிபர் பேரூந்தின் இருக்கையில் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக இவரது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த வயோதிபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மேலதிக விசாரனைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் நிருபர் லெம்பட்

No comments:

Post a Comment

Post Bottom Ad