அமெரிக்க கேபிட்டலை இன்னும் இரண்டு மாதங்கள் பாதுகாக்க பென்டகன் ஒப்புதல் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 10, 2021

அமெரிக்க கேபிட்டலை இன்னும் இரண்டு மாதங்கள் பாதுகாக்க பென்டகன் ஒப்புதல்

அமெரிக்க கேபிட்டலை இன்னும் இரண்டு மாதங்கள் பாதுகாக்க உதவும் வகையில் வொஷிங்டனில் சுமார் 2,300 தேசிய காவல்படையினரை வைத்திருக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பென்டகன் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

இந்த எண்ணிக்கையானது தற்சமயம் கேபிட்டலில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள 5,200 தேசிய காவல் படையினரின் எண்ணிக்கையில் அரை சதவீதமாகும்.

"கோரிக்கையின் முழுமையான மறு ஆய்வுக்குப் பிறகு, தயார்நிலைக்கு அதன் சாத்தியமான தாக்கத்தை நெருக்கமாக பரிசீலித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று பென்டகன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களால் அமெரிக்க காங்கிரஸின் இருக்கை மீது ஜனவரி 6 தாக்குதல் நடத்தப்பட்டதிலிருந்து, தேசிய காவல்படை வீரர்கள் கேபிட்டல் வளாகத்திற்கு அனுப்பப்பட்டு, பாதுகாப்பு சுற்றளவு நீட்டிக்க உயரமான வேலி அமைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 6 தாக்குதலில் 300 க்கும் மேற்பட்டோர் மீது மத்திய அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர், இந்த கலவரம் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட ஐந்து மரணங்களுக்கு வழிவகுத்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad