வடக்கில் போராடும் சுகாதார தொண்டர்களை சந்தித்து உறுதி மொழி வழங்கினார் அமைச்சர் மகிந்தானந்த - News View

Breaking

Post Top Ad

Thursday, March 18, 2021

வடக்கில் போராடும் சுகாதார தொண்டர்களை சந்தித்து உறுதி மொழி வழங்கினார் அமைச்சர் மகிந்தானந்த

யாழ்ப்பாணத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் ஜனாதிபதியை சந்தித்து கதைப்பதற்கு தான் ஏற்பாடு செய்து தருவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உறுதி மொழி வழங்கியுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்து 17 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் இன்று வயாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து போராட்டுத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு திரும்பிய கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே போராத்தில் ஈடுபட்ட சுகாதார தொண்டர்களிடம் கலந்துரையாடியபோது ஜனாதிபதியை சந்தித்து கதைப்பதற்கு தான் ஏற்பாடு செய்து தருவதாக அமைச்சர் உறுதி வழங்கினார்.

இச்சந்திப்பின் போது யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான அங்கயன் இராமநாதன் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad