மாணவர்களை இலக்கு வைத்து பாமசிகளில் போதை மாபியா - News View

Breaking

Post Top Ad

Friday, March 19, 2021

மாணவர்களை இலக்கு வைத்து பாமசிகளில் போதை மாபியா

இரத்தினபுரி மாவட்டத்தில் மாணவர்களை இலக்கு வைத்து பாமசிகள் மூலம் போதைப் பொருள் விற்பனை இடம்பெற்று வருவது குறித்து பாதுகாப்பு துறையினர் அவதானத்தை செலுத்தியுள்ளனர்.

திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் போதைப் பொருள் விற்பனை காரணமாக பாடசாலை மாணவர்கள் கிராம தோட்டப்பகுதி இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருவதனால் இதனைக் கட்டுப்படுத்த இரத்தினபுரி மாவட்ட போதைப் பொருள் பொலிஸ் சுற்றி வளைப்பு பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் போதையை ஏற்படுத்தவல்ல பொருட்களை விற்பனை செய்து வந்த இத்தகைய பாமசிகளில் குறுகிய காலத்தில் உடல் உள உயிர் பாதிப்புக்களை ஏற்படுத்தவல்ல மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருவது விசாரணைகளின்போது கண்டறியப்பட்டுள்ளது.

போதைப் பொருளுக்கு பதிலாக சந்தேகங்களை ஏற்படுத்தாத மாணவர் இளைஞர்களைக் கவரக்கூடிய குளிசை வகைகளை இவர்கள் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுறது. 

இவற்றில் சில கொடிய நோய்களுக்கு பயன்படுத்தும் குளிசைகள் எனவும் வைத்தியர்களின் சிபாரிசு இல்லாமல் விநியோகிக்க முடியாத இந்த உயிராபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய குளிசை வகைகள் கொள்ளை விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தினகரன்

No comments:

Post a Comment

Post Bottom Ad