மியன்மார் வெளிநாட்டு அமைச்சரை அழைத்துள்ளமைக்கான காரணத்தை கூறியது இலங்கை வெளிநாட்டு அமைச்சு - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 10, 2021

மியன்மார் வெளிநாட்டு அமைச்சரை அழைத்துள்ளமைக்கான காரணத்தை கூறியது இலங்கை வெளிநாட்டு அமைச்சு

(எம்.மனோசித்ரா)

கொழும்பில் மெய்நிகரூடாக இடம்பெறவுள்ள பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார கூட்டுறவிற்கான வங்காளவிரிகுடா முயற்சியின் (பிம்ஸ்டெக்) மாநாடு தொடர்பில் மியன்மார் உள்ளிட்ட உறுப்பு நாடுகளுக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி கொழும்பில் மெய்நிகரூடாக இடம்பெறவுள்ள 17 ஆவது பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முயற்சி உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்கு மியன்மார் வெளிநாட்டமைச்சருக்கு அழைப்பு விடப்பட்டிருப்பது தொடர்பாக சமூக ஊடக தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முயற்சிக்கு தலைமை தாங்கும் இலங்கை இந்த வருட இறுதியில் இலங்கையில் இடம்பெறுமென எதிர்பார்க்கப்பட்டுள்ள உச்சிமாநாட்டின் ஆவணங்களை இறுதிப்படுத்தும் நோக்குடனேயே அதுசம்பந்தமான கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்கு பங்களாதேசம், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment