பாடப்புத்தங்களில் உள்ள விடயங்களை அரசியல்வாதிகளின் தேவைகேற்ப மாற்ற முடியாது - ஹசன் அலி - News View

Breaking

Post Top Ad

Thursday, March 11, 2021

பாடப்புத்தங்களில் உள்ள விடயங்களை அரசியல்வாதிகளின் தேவைகேற்ப மாற்ற முடியாது - ஹசன் அலி

இஸ்லாமிய பாட புத்தகங்களில் காணப்படும் அடிப்படைவாத விடயங்கள் நீக்கப்படும் என்று அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளதைப் போன்று, பாடப்புத்தங்களில் உள்ள விடயங்களை அரசியல்வாதிகளின் தேவைகேற்ப மாற்றிக் கொள்ள முடியாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இஸ்லாமிய பாட நூல்களில் எது அடிப்படைவாத விடயம், எது அடிப்படைவாதமற்ற விடயம் என்பதை அரசியல்வாதிகள் தீர்மானிக்க முடியாது. பல்கழைகத்தினூடாக இஸ்லாமிய கல்வியியலாளர்கள் அடங்கிய குழுவொன்றை நியமித்து அதனூடாக இவ்விடயம் தொடர்பில் தீர்மானிக்க முடியும்.

அடிப்படைவாதமென்பது அனைத்து மதங்களிலும் காணப்படுகிறது. தாம் பின்பற்றும் மதத்தைப் பற்றி முறையாக புரிந்து கொள்ளாதவர்களே அடிப்படைவாதிகளாவர். மதங்களைப் பற்றி நன்கு அறிந்து அவற்றை பின்பற்றுபவர்கள் அடிப்படைவாதிகளாக இருக்க மாட்டார்கள்.

எனவே இஸ்லாம் பாட நூல்களில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை அமைச்சர் சரத் வீரசேகர கூறுவதைப் போன்று அரசாங்கத்தின் தேவைக்காக அல்லது அரசியல் கட்சியொன்றின் தேவைக்காக மாற்ற முடியாது. இஸ்லாமிய கல்வியியலாளர்கள் அடங்கிய குழுவை நியமித்து இதற்கான தீர்வை காணுமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.

கேசரி

No comments:

Post a Comment

Post Bottom Ad