கொழும்பு, புளூமெண்டலில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 30, 2021

கொழும்பு, புளூமெண்டலில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

கொழும்பு, புளூமெண்டல் பகுதியில் ஏழு போலி 5 ஆயிரம் ரூபா நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதான நபர்கள் வெல்லம்பிட்டி மற்றும் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்தவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர்களை இன்றையதினம் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக் காலங்களில் போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளமையினால் பொதுமக்கள் இப் பண்டிகை காலங்களில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad