சமூக தலைமைத்துவ மேம்பாடு தொடர்பில் பெண்களுக்கான டிப்ளோமா பாடநெறியின் ஆரம்ப நிகழ்வு ஆளுநர் முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது - News View

Breaking

Post Top Ad

Thursday, March 11, 2021

சமூக தலைமைத்துவ மேம்பாடு தொடர்பில் பெண்களுக்கான டிப்ளோமா பாடநெறியின் ஆரம்ப நிகழ்வு ஆளுநர் முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது

சமூக தலைமைத்துவ மேம்பாடு தொடர்பில் பெண்களுக்கான டிப்ளோமா பாடநெறியின் ஆரம்ப நிகழ்வு ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

கீழ் மட்டத்திலிருந்து பெண்களின் தலைமைத்துவத்தை வலுவூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தின் முக்கிய நிகழ்வாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் CDLG திட்டத்தின் ஊடாக உள்ளூராட்சி விவகாரங்களில் முடிவெடுக்கும் பணிகளில் பெண்களும் பங்கேற்று, அது தொடர்பிலான திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாக் கொண்டு, ஊவா மாகாண சபை மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து இந்த டிப்ளோமா பாடநெறியை ஆரம்பித்துள்ளது.

இந்த நிகழ்வில் ஊவா மாகாண பிரதான செயலாளர் திரு. P.B. விஜயரத்ன, உள்ளாட்சி ஆணையர் திரு. மங்கள விஜேநாயக, ஆளுநரின் செயலாளர் திரு. நிஹால் குணரத்தன, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி. சந்தியா அபன்வெல, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வாசனா மைத்திரி உள்ளிட்ட அதிகாரிகள், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad