பொலிஸ் அதிகாரியின் செயலை அரசு ஒருபோதும் அனுமதிக்காது - உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 30, 2021

பொலிஸ் அதிகாரியின் செயலை அரசு ஒருபோதும் அனுமதிக்காது - உதய கம்மன்பில

பொலிஸ் அதிகாரி ஒருவர் நடு வீதியில் சாரதி ஒருவரை தாக்கிய சம்பவத்தை அரசு அனுமதிக்கவில்லை. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பொலிஸார் சட்டத்தை கையிலெடுத்து செயல்படுவது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அரசாங்கம் பேச்சிலன்றி செயலில் காட்டியுள்ளது. இந்த அதிகாரி இடைநிறுத்தம் செய்யப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இவ்வாறான செயல்களை அனுமதிக்கவில்லை. அதனாலே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதென்றார். 

இராணுவம் மற்றும் பொலிஸார் செய்யும் மனித உரிமை மீறல்களினால் ஜெனீவாவில் அரசாங்கம் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுவது பற்றிய எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

அமெரிக்க பொலிஸ் அதிகாரி ஒருவர் கறுப்பினத்தவரை கொலை செய்தார். உலகம் முழுவதும் பொலிஸாரினால் பொதுமக்களுக்கு அநியாங்கள் நடைபெறுகிறது. அரசாங்கம் செயற்பாடமல் இருப்பதுதான் தவறு. ஜெனீவா பிரேரணைக்கு இவ்வாறான விடயங்கள் காரணமல்ல. ஜெனீவா பிரேரணையை அரசு நிராகரித்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment