மரணப் படுக்கையில் பொலிஸார் : ‘வீடியோ’ எடுத்த ஆடவர் குற்றவாளியாக நிரூபணம் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 11, 2021

மரணப் படுக்கையில் பொலிஸார் : ‘வீடியோ’ எடுத்த ஆடவர் குற்றவாளியாக நிரூபணம்

விபத்து இடம் ஒன்றில் மரணப் படுக்கையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளை கேலி செய்து வீடியோ எடுத்த குற்றத்தை அவுஸ்திரேலியர் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதன்படி சமூக ஒழுக்கத்திற்கு எதிராக செயற்பட்டது மற்றும் போதைப் பொருள் மற்றும் ஏனைய குற்றங்களில் 42 வயதான ரிச்சர்ட் புசி குற்றம் காணப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் வேகமாக காரை செலுத்தியதற்காக மெல்போர்னில் வைத்து நான்கு பொலிஸ் அதிகாரியால் ரிச்சர்ட் புசி நிறுத்தப்பட்டார். அவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட நிலையில், அந்த நான்கு பொலிஸாரும் லொரி வண்டி ஒன்றில் மோதுண்டனர்.

அந்த நான்கு பொலிஸாரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்போது அங்கிருந்த புசி, தனது கெமராவை எடுத்து அவர்கள் மரணித்துக் கொண்டிருக்கும் காட்சியை மூன்ற நிமிடங்கள் வீடியோ எடுத்துள்ளார்.

அதில் அவர் அந்த பொலிஸாரை கேலி செய்யும் வகையில், 'இதுதான், சிறப்பாக இருக்கிறது, மிகச் சிறப்பாக இருக்கிறது' என்று கூறுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கு உச்சபட்ச தண்டனை அவுஸ்திரேலிய சட்டத்தில் கூறப்படவில்லை. அவர் மீண்டும் மார்ச் 31 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No comments:

Post a Comment