கொரோனா தொற்றுக்கு மத்தியில் மாகாண பஸ் சேவைகளுக்காக வழங்கப்பட்டிருந்த நிவாரண காலயெல்லை நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 9, 2021

கொரோனா தொற்றுக்கு மத்தியில் மாகாண பஸ் சேவைகளுக்காக வழங்கப்பட்டிருந்த நிவாரண காலயெல்லை நீடிப்பு

(எம்.மனோசித்ரா)

கொவிட்-19 தொற்று நிலைமையின் காரணமாக மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகளை வழமைக்கு கொண்டு வருவதற்கு கால தாமதம் ஏற்படும் என்பதால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மானியங்களை இம்மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொவிட்-19 தொற்று நிலைமையில் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் போக்கு வரத்து பஸ் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு பஸ் உரிமையாளர்களிடமிருந்து அறிவிடப்படும் புதுப்பித்தல் கட்டணம், தாமதக் கட்டணம், விலைமனுக் கோரல் கட்டணம், நேரசூசி கட்டணம், உள்நுழைவு அனுமதிப்பத்திர கட்டணம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை தற்காலிக அனுமதிப்பத்திர கட்டணம் போன்றவற்றை 2020 ஆம் ஆண்டின் இறுதி வரை விடுவிப்பதற்காக 2020 நவம்பர் 09 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பஸ் சேவைகளை மீள்நிலைக்கு கொண்டு வருவதற்கு மேலும் சில காலம் எடுக்கும் என்பதால், வருடாந்த விலைமனுக் கோரல் கட்டணத்தின் 10 வீதம் அல்லது 15,000 ரூபாய் போன்ற பெறுமதிகளில் அதிக பெறுமதி கொண்ட தொகையை அறவிடல், அதிவேக நெடுஞ்சாலை தற்காலிக அனுமதிப்பத்திரக் கட்டணத்தின் 10 வீதத்தை அறவிடல் மற்றும் நேரசூசி மற்றும் உள்நுழைவு அனுமதிப்பத்திர கட்டணத்தை விடுவித்தல் மானியங்களையும் இம்மாதம் 31 ஆம் வரை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

No comments:

Post a Comment