பொலிஸ் துறையை நவீனமயமாக்க தீர்மானம் - அமைச்சரவை அங்கீகாரம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 9, 2021

பொலிஸ் துறையை நவீனமயமாக்க தீர்மானம் - அமைச்சரவை அங்கீகாரம்

(எம்.மனோசித்ரா)

இலங்கை பொலிஸின் முழுமையான நவீனமயமாக்கல், வழிநடாத்துதல் மற்றும் நடைமுறைப்படுத்தல் கருத்திட்டத்தை திட்டமிடுவதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை பொலிஸ் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதிப்படுத்தல், சட்டம் மற்றும் ஒழுங்கு பேணுவதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள முக்கிய நிறுவனமாவதுடன், நாடளாவிய ரீதியில் மக்களுக்கு பல்வேறு சேவைகளையும் ஆற்றி வருகின்றது.

தற்போது பின்பற்றப்படுகின்ற சம்பிரதாய முறைகளை மாற்றியமைத்து, இலங்கைப் பொலிசை நவீனமயப்படுத்தும் தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதன் கீழ் நவீன பொறிமுறைகளுக்கமைய மோட்டர் வாகனங்களை வழிநடாத்தும் செயன்முறையின் பயனுள்ள வகையில் வினைத்திறனாக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, நகர்ப்புறங்களில் காணப்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக டிஜிட்டல் முறையான தீர்வுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் மோட்டார் வாகன மற்றும் வீதிப் பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் நடவடிக்கைகளின் வினைத்திறன் தொடர்பாக முன்னுரிமை வழங்க வேண்டியுள்ளது.

அதற்கமைய, குறித்த பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி இலங்கை பொலிசின் முழுமையான நவீனமயமாக்கல், வழிநடாத்துதல் மற்றும் நடைமுறைப்படுத்தல் கருத்திட்டத்தை திட்டமிடுவதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad