காமிஸ் முஷைட் நகரை நோக்கிச் சென்ற ஹவுத்தியினர் ஏவிய ட்ரோனை தடுத்து நிறுத்திய சவுதி - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 9, 2021

காமிஸ் முஷைட் நகரை நோக்கிச் சென்ற ஹவுத்தியினர் ஏவிய ட்ரோனை தடுத்து நிறுத்திய சவுதி

சவுதி தலைமையிலான அரபு கூட்டணி, சவுதி அரேபியாவில் தெற்கு பிராந்தியத்தில் காமிஸ் முஷைட் நகரை நோக்கிச் சென்ற ஹவுத்தியினர் ஏவிய ட்ரோனை தடுத்து நிறுத்தியதாக சவுதியின் அல்-எக்பாரியா செய்திச் சேவை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

ஹவுத்தி போராளிகள் பெரும் தவறுகளையும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கொடூரமான மீறல்களையும் செய்கிறார்கள் என்று சவுதி தலைமையிலான அரபு கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில், சவுதி எண்ணெய் நிலையங்களைத் தாக்கிய பின்னர் ஹவுத்திகள் திங்களன்று சர்வதேச கண்டனத்தை எதிர்கொண்டதுடன், அமெரிக்க ஆதரவுடைய சமாதான முயற்சிகள் குறித்து ஹவுத்திகள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று அமெரிக்கா கூறியது.

சவுதி அரேபியாவில் வடக்கு யேமனைக் கட்டுப்படுத்தும் இந்த ஹவுத்தியினரின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்துள்ளன.

அவர்கள் சவுதி அரேபியாவின் இராணுவ உட்கட்டமைப்பு மற்றும் தளங்கள், விமான நிலையங்கள், எண்ணெய் உட்கட்டமைப்பு, ஏவுகணை பாதுகாப்பு மற்றும் நகரங்களை குறிவைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad