தடுப்பூசி இறக்குமதிக்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை - பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 17, 2021

தடுப்பூசி இறக்குமதிக்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை - பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

கொவிட்-19 தடுப்பூசிகளைக் இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த செயல்முறையை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் முழுமையாக கண்காணிக்க வேண்டும் என்று அதன் தலைவர் உபுல் ரோஹான குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தடுப்பூசிகளின் பயன்பாட்டை அதிகரிக்க இதுபோன்ற முறைகள் தேவைப்படும் என்று அவர் கூறினார்.

´இலங்கையில் அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் தொழிற்சாலைகளிலும் மற்றும் வேறு தொழில் நிறுவனங்களிலும் பதிவாகின்றனர். விசேடமாக ஆடை தொழிற்சாலைகளில் அதிகமாக பதிவாகின்றது. 

அடுத்த கட்டமாக தொழில் செய்யும் மக்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதனை அரசாங்கத்தினால் தற்போது வழங்க முடியா விட்டால் தனியார் பிரிவினருக்கு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட வேண்டும். 

தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு சுகாதாரத் துறையிலிருந்து தடுப்பூசிகளைப் பெறுவதன் அடிப்படையில் இலங்கைக்கு தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார்.

No comments:

Post a Comment