நாட்டில் சிலர் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஊடகங்கள் தெரிவிப்பது பொய்யானதல்ல - இருபது ஆண்டுகளுக்கு மேலான சட்டத்தை திருத்துமாறு அமைச்சர் அமரவீர பணிப்பு - - News View

About Us

About Us

Breaking

Saturday, March 20, 2021

நாட்டில் சிலர் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஊடகங்கள் தெரிவிப்பது பொய்யானதல்ல - இருபது ஆண்டுகளுக்கு மேலான சட்டத்தை திருத்துமாறு அமைச்சர் அமரவீர பணிப்பு -

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய சுற்றுச்சூழல் சட்டம் திருத்தம் செய்யப்படாதுள்ளதால் அதனை திருத்தம் செய்ய நடவடிக்கைகள் எடுக்குமாறு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தேசிய சுற்றுச்சூழல் சட்டம் திருத்தம் செய்யப்படுவது தொடர்பான கலந்துரையாடலொன்று சுற்றுச்சூழல் சுற்றாடல் அமைச்சில் நடைபெற்றது.

மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியின் முன்னேற்றம் குறித்து இந்தக் கலந்துரையாடலில் மதிப்பீடு செய்யப்பட்டதுடன், தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான பணிப்புரையையும் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்திருந்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் தற்போதுள்ள அதிகாரங்கள் போதுமானதாக இல்லையென அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன், சில தனிநபர்கள் நாட்டில் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஊடகங்கள் தெரிவிப்பது பொய்யானது அல்ல. இந்த சுற்றுச்சூழல் பாதிப்புக்கு பின்னால் உள்ளூர் அரசியல்வாதிகள், மோசடி செய்பவர்கள் மற்றும் சில அதிகாரிகள் இருப்பது இரகசியமல்ல என்றும் அவர் வலியுறுத்தினார். 

நாட்டின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தில் திருத்தம் செய்ய அதிகாரங்களுடன் பல வலுவான உட்பிரிவுகள் சேர்க்கப்பட வேண்டும் என்பதுடன், வலுவான சுற்றுச்சூழல் உருவாக்க 42 புதிய உட்பிரிவுகளை உள்ளடக்கி தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தில் திருத்தம் செய்ய கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி, கலந்துரையாடலில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் பிரகாரம் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கும் நோக்கத்துடன் சுற்றுச்சூழல் சட்டத்தில் விரைவாக திருத்தங்களை மேற்கொண்டு புதிய சட்டத்தை தயாரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சின் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment