அரசியல்வாதிகள் போராட்டங்களில் கலந்துகொண்டு குளிர் காய்கிறார்கள் - அங்கஜன் இராமநாதன் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 20, 2021

அரசியல்வாதிகள் போராட்டங்களில் கலந்துகொண்டு குளிர் காய்கிறார்கள் - அங்கஜன் இராமநாதன்

ஒரு பிரதேசத்தின் முன்னேற்றம் அந்த பிரதேசத்தின் அபிவிருத்தியிலேயே தங்கியுள்ளது. அபிவிருத்தி என்ற சொல்லை செயலாக்கும் செயலுருவில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் இந்த பிரதேசத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் போராட்டம் என்றால் முதலாவதாக பிரசன்னமாகி குளிர் காய்வதை பிரதான வேலையாக செய்வார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

நேற்று வட்டுக்கோட்டையில் புதிய தபால் அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் உரையாற்றுகையில், இரண்டு தினங்களுக்கு முன்னர் சுகாதார தொணரடர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது தங்கள் அரசியல் இலாபத்துக்காக சகாதார தொண்டர்களுக்கான தீர்வை எட்டவிடாமல் வருகை தந்த அமைச்சரை கதைக்கவிடாமல் செய்தார்கள். ஆனாலும் அமைச்சர் மகிந்த அளுத்தகம ஜனாதிபதியுடன் கதைத்து சுகாதார தொண்டர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறியிருக்கின்றார். 

வட மாகாண காணி பத்திரங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட போது அரசியல் பிரிதிநிதிகள் ஆர்பாட்டம் மேற்கொண்டனர். நான் போரட்டம் செய்யவில்லை. சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து பொறுப்பு வாய்ந்த மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் என்ற வகையில் யாழில் இடம்பெற்ற கிராமிய அபிவிருத்தி சம்மந்தமான கூட்டத்தில் கலந்துரையாடி அமைச்சர் மூலம் திரும்ப யாழிற்கு கொண்டு வர ஏற்பாடு செய்தேன்.

30 வருட யுத்தத்தில் பல அபிவிருத்தி இடைவெளியை சந்தித்துள்ளோம். அபிவிருத்தி பாதையூடாகவே எங்கள் பிரதேசத்தை முன்னேற்றகரமான பாதையில் இட்டுச் செல்வோம். 

அமைச்சர் அவர்களே எமது வடக்கில் உள்ள தபால் துறையை முன்னேற்றகரமான அபிவிருத்தி அடைந்த துறையாக மாற்றுவதற்கு உதவி செய்ய வேண்டும். மீள்குடியேற்ற பிரதேசங்களில் உள்ள தபால் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். மற்றும் பாழடைந்த தபால் நிலையங்கள் புனரமைக்கப்பட வேண்டும் என்றார்.

ஐ.சிவசாந்தன்

No comments:

Post a Comment