பொலிஸ் அதிகாரியின் வாக்கு மூலத்திலுள்ள விடங்களை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துங்கள் - மகளிர் அமைச்சைக்கூட ஓரு பெண்ணுக்கு வழங்க முடியாத மனோபாவம் கொண்ட அரசாங்கம் : ஹர்ஷன ராஜகருனா - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 9, 2021

பொலிஸ் அதிகாரியின் வாக்கு மூலத்திலுள்ள விடங்களை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துங்கள் - மகளிர் அமைச்சைக்கூட ஓரு பெண்ணுக்கு வழங்க முடியாத மனோபாவம் கொண்ட அரசாங்கம் : ஹர்ஷன ராஜகருனா

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை குறித்து இந்த நாட்களில் அதிகம் பேசப்படுகிறது. கடந்த வாரம் கர்தினால் தலைமையில் கறுப்பு ஞாயிறு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. நாங்களும் அதற்கு ஆதரவு வழங்கினோம். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பிரதான நோக்கமும் இத்தாக்குதலின் உன்மையான சூத்திரதாரிகளைக் கண்டுபிடிப்பதாகக் கூறியே, தேர்தல் காலங்களில் இதை முன்னலைப்படுத்தி, இனவாதத்தைப் தூன்டி ஆட்சிக்கு வந்தனர். இன்று ஒன்றரை வருடங்கள் கடந்தும் இன்னும் உன்மைகளை மறைத்துக் கொண்டிருக்கின்றனர். இன்று மக்களையும் ஏமாற்றி, கர்தினளையும் ஏமாற்றியுள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருனா தெரிவித்தார்.

நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருனா அவ்வாறு தெரிவித்தார்.

தேர்தல் காலங்களில் அப்போதைய ஆட்சியிலுள்ள அரசாங்கம்தான் பொறுப்புக்கூற வேண்டும் என்று இன்று ஆட்சியிலுள்ளவர்கள் கூறினார்கள். அப்படியானால் 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் இடம்பெற்ற லசந்த விக்ரமதுங்க, பிரகனீத் எக்னெலிகொட உள்ளிட்ட ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் மற்றும் வெள்ளை வேன் கலாசாரத்தின் பின்னனியில் இருந்தவற்றிற்கும் அப்போதைய அரசாங்கம் பொறுப்பெடுக்க வேண்டும். தற்போதைய ஜனாதிபதிதான் அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக இருந்தார். சபாநாயகராக சமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட குடும்பத்தவர்கள். எனவே ஈஸ்டர் தாக்குதலையும் ஓர் அரசியல் காரணியகப் பார்க்காமல் சட்டம் சார்ந்து பார்க்க வேண்டும் என்று கூறினார். 

சஹ்ரானுக்கு தலைமை தாங்கியவர்கள் குறித்து பொலிஸ் அதிகாரி வாக்கு மூலம் கொடுத்துள்ளார். அத்ததகைய விடங்களை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துங்கள். இந்தியாவுடன் இன்று முக்கியமானது கிழக்கு முனையம் குறித்தோ அல்லது மேற்கு முனையம் குறித்தோ அல்ல, மாறாக சாரா தொடர்பானதாகும். தாக்குதலுடன் தொடர்பான இந்த விடயத்திற்கே இந்தியாவுடன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இன்று இராஜதந்திர சிக்கலுக்குள் இலங்கை தாமாகவே இறுகிக் கொண்டுள்ளது. உலக நாடுகளின் சர்வதேச அதிகாரப் போட்டிக்குள் இலங்கை சிக்கியுள்ளது. சீனாவுடனான நெருங்கிய உறவால் ஐக்கிய இராச்சியம், அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் போன்றன இவர்களின் முன்னைய ஆட்சியில் ஒதுங்கி இருந்தன. இந்த ஒதுங்கி இருப்பிற்குள் ஏனைய சக்திகள் உள்விவகாரங்களில் தலையிட்டு இறுதியில் மின்சாரக் கதிரை வரை சென்றது.

இவற்றை நாங்கள் நல்லாட்சியில் சீர் செய்து இராஜதந்திர உறவுகளை நலனாகப் பேனினோம். இன்று மீண்டும் இந்த ஆட்சியிலும் இராஜதந்திர சிக்கலை இவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். ஏன் இவ்வாறான பிரச்சிணைக்குள் வேண்டுமென்றே சிக்கியுள்ளது என்றால், அன்மையில் வரும் தேர்தல்களில் இவற்றை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதற்கே, சர்வதேச தலையீடுகள் அதிகரித்துள்ளன, நாட்டைப் பாதுகாக்க எங்களுக்கு வாக்களியுங்கள் என்று வெற்று கோஷங்களை தூக்கிப் பிடிக்கவே இதையும் செய்கின்றனர்.

நேற்றுமுன்தினம் சர்வதேச மகளிர் தினம். தமது உரிமைகளுக்காக வீதியில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட பெண்களை பொலிஸார் தாக்கிய துரதிஷ்ட நிலையை ஊடகங்களில் பார்த்தோம். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மகளிர் தினத்திலேயே தாக்கப்பட்டுள்ளனர். இதுதான் 52 சதவீதமுள்ள இந்நாட்டு பெண்களுக்கு இந்த அரசாங்கம் கொடுக்கும் மதிப்பாகும். 

இதையும் விட கீழ்த்தரமான விடயம்தான் இந்த அரசாங்கத்தில் மகளிர் விவகார அமைச்சு கூட ஓர் பெண்ணுக்கு வழங்க முடியாத மனோபாவம் கொண்ட ஆட்சியாக அமைந்து காணப்படுகிறது. தாதியர்களில் 80% பெண்கள், அந்நியச் செலாவானியைப் பெற்றுத் தரும் 95% பெண்கள், தேயிலை சார்ந்த தொழிலில் 90% பெண்கள், இறப்பர் செய்கைகளில் 90% பெண்கள் இவ்வாறு இருக்கும் போது அமைச்சைக்கூட வழங்க முடியாத அரசாங்கமாக இருக்கிறது.

அத்தியவசியப் பொருடகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்தவன்னமுள்ளன. வர்த்தமானிகளில் உள்ள விலைக்கு சந்தையில் பொருட்கள் இல்லை. 

இன்று தடுப்பூசி பாரிய போதாமையாக இருக்கிறது. நான்கு வாரங்களில் இரண்டாம் கட்ட எஸ்ட்ரா சனிகா தடைப்பூசிகளை வழங்குவதாகக் கூறிய இந்தியா மீள வழங்குவதில்லை என்று தெரிவித்துள்ளது. நான்கு வாரங்களை அன்மித்துள்ளோம். மாற்றீடுகள் அரசாங்கத்திடம் உண்டா என்று வினவினார்.

No comments:

Post a Comment