விவசாய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க 3314 மில்லியன் நிதி ஒதுக்கீடு - அமைச்சர் மகிந்தானந்த - News View

Breaking

Post Top Ad

Thursday, March 18, 2021

விவசாய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க 3314 மில்லியன் நிதி ஒதுக்கீடு - அமைச்சர் மகிந்தானந்த

வன்னியில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் விவசாய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக 3314 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

வவுனியாவில் கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்தும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கலந்துரையாடல் ஒன்று அமைச்சரின் பங்கேற்புடன் மாவட்ட செயலக கேட்போர் கூட்டத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் விவசாய அபிவிருத்தி திட்டங்களிற்காக வன்னி மாவட்டத்திற்கு இந்த வருடம் 3314 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளோம் அந்த வகையில் வவுனியா மாவட்டதிற்கு 1352 மில்லியனும், முல்லைத்தீவிற்கு1699 மில்லியனும், மன்னார் மாவட்டத்திற்கு 262 மில்லியனுமாக பிரித்து வழங்கியுள்ளோம்.

குறித்த நிதி விவசாய திணைக்களம், கமநல அபிவிருத்தி திணைக்களங்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய திணைக்களங்களூடாக செயற்படுத்தப்படும்.

இதேவேளை வன்னியில் விவசாய காணிகளை யானைகள் சேதமாக்கும் நிலையில் அவற்றிற்கான யானை வேலிகளை அமைத்து நிரந்தர தீர்வினை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனால் கோரப்பட்டதுடன், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வன வளத் திணைக்களத்தால் பொதுமக்களின் காணிகளை எல்லையிடுவது தொடர்பாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பாகவும், காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடலில் விரிவாக ஆராய்ந்து தீர்மானம் எடுக்கமுடியும் என்று அமைச்சர் மகிந்தானந்த தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad