“ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையில் 22 பாகங்களை அரசாங்கம் மறைக்க முற்படுகிறது” - மயந்த திசாநாக்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 9, 2021

“ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையில் 22 பாகங்களை அரசாங்கம் மறைக்க முற்படுகிறது” - மயந்த திசாநாக்க

ஒரு பயங்கரவாத தாக்குதல் காரணமாக தந்தையை இழந்தவன் என்ற வகையில் இன்று உங்கள் முன் பேசுகிறேன். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் கடந்து விட்டன. ஈஸ்டர் தாக்குதலுக்குரிய நீதி நியாயம் இன்னும் கிடைக்கவில்லை. உன்மைகள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. கடந்த ஞாயிறு கறுப்பு ஞாயிறு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது என  பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாக்க தெரிவித்தார்.

08ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாக்க அவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று இடம்பெறும் சகல நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்று சஜித் பிரேமதாச கூறியுள்ளார். அந்த வகையில் ஈஸ்டர் தாக்குதலோடு தொடர்பான விடயங்களை மக்களுக்கு தெரியப்படுத்துவதும் குற்றவாளிகளை கண்டு பிடுத்து அவர்களுக்கு தன்டனை வழங்குவதும் ஆட்சியிலுள்ள இந்த அரசாங்கத்தின் பெறுப்பாகும்.

பின்னால் இருந்து தூன்டி விட்டவர்கள், இதன் பால் தேவையுள்ளவர்கள், நிதி வழங்கியவர்கள்களை கண்டு பிடிப்பதும் இது உள்நாட்டவர்கள் மாத்திரம் தொடர்புடையவர்களா? அல்லது சர்வதேச நாடுகளோ நாடோ தொடர்பு பட்டதா என்றதையும் கண்டு பிடிக்கும் பெறுப்பு இந்த அரசாங்கத்திற்கு உண்டு. இதன் பால் தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இதை கிடப்பில் போடவும் முடியாது, இழுத்தடுப்புச் செய்யவும் முடியாது.

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையில் பல பிரதானமான 80 பாகங்கள் உள்ளதாகவும் அதில் 22 பாகங்களை அரசாங்கம் மறைக்க முற்படுவதாகவும் குற்றம் சாட்டினார். ஜனாதிபதி செயலகத்தில் மறைத்துள்ள 22 பாகங்களையும் வெளியிட்டு மக்களுக்கு உன்மையைக் கூறுமாறு அரசாங்கத்தை வேண்டிக் கொண்டார். 

நிகழ்வென்றில் ஜனாதிபதி தமக்கும் ஈஸ்டர் தாக்குதலுக்கும் தொடர்பில்லை என்று கூறி ஈஸ்டர் அறிக்கை விடயங்களை கூறியிருந்தார். தமக்கு அச்சம் இல்லை என்றால் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையை மக்கள் பிரதிநிதிகள் சபையான பாராளுமன்றத்திற்கு சமர்ப்பியுங்கள். அதிலும் நம்பிக்கையில்லையாயின் சட்டமா அதிபருக்கு வழங்குங்கள்.

இன்று அத்தியவசியப் பொருட்களின் விலை நாளுக்குநாள் அதிகரித்த வன்னமுள்ளன. இன்னும் நாட்கள் கடக்கக்கடக்க மேலும் விலைகளின் ஏற்றம் அதிகரித்துக் கொண்டோ செல்லும். இந்நிலை நீடிக்கும் என்ற நிலைதான் தொடர்ந்துமுள்ளது.

12 வருடங்கள் கடந்தும் இன்னும் லசந்த விக்ரமதுங்கவின் மரணம் தொடர்பான விடயங்கள் வெளிவரவில்லை. விசாரனைகள் முறையாக இடம்பெறவில்லை. இது குறித்து அவருடைய மகள் அகிம்சா விக்ரமதுங்க சர்வதேச ஊடகமொன்றிற்கு தொரியப்படுத்தியதை பார்த்தோம். ஊழலுக்கொதிராக குரல் கொடுத்த சிறந்த ஊடகவியலாளருக்கு ஏற்ப்பட்ட நிலை மீண்டும் ஏற்படபடக்கூடாது என நாம் பிரார்த்திக்க வேண்டும்.

தற்போது கோவிட் தடுப்பூசி விடயத்தில் பூரணமற்ற நாடாகவுள்ளோம். இந்தியாவிலிருந்து கிடைக்கப் பெறும் தடுப்பூசிகள் நிறுத்தப்படுமாக இந்தியாவின் ஆய்வு நிறுவனமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறு எனின் தடுப்பூசிகளை பெறுவதற்கான மாற்றீடுகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

சூழல் பிரச்சிணை பாரிய பதிப்புகளை ஏற்ப்படுத்தி வருகிறது. கடந்த நாட்களில் கேகாலை நகரில் மரங்களை வெட்டியதால் பறவை உள்ளிட்ட உயிரினங்கள் நகரை சூழ்ந்து மின் கம்பங்களில் நின்றதை அவதானித்தோம். இது திட்டம் இல்லாத காடழிப்பாகும். பாரிய சூழல் பிரச்சிணைக்கு நாடு முகம் கொடுத்துள்ளது எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment