சிங்கராஜ வனத்தில் 143 ஏக்கர் நிலம் அழிப்பு - News View

Breaking

Post Top Ad

Friday, March 12, 2021

சிங்கராஜ வனத்தில் 143 ஏக்கர் நிலம் அழிப்பு

யுனெஸ்கோ நிறுவனத்தால் உலக பாரம்பரிய உரிமை வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் சிங்கராஜ வனத்தில் 143 ஏக்கர் பகுதி அழிக்கப்பட்டுள்ளதாக சூழலியலாளர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

தேயிலைச் செய்கைக்காக காடுகள் அழிக்கப்படுவதாக சுற்றாடலியலாளர்கள் முறைப்பாடு செய்கின்றனர்.

தெல்கொட என்ற பிரதேசத்திலேயே காடழிப்பு அதிகளவில் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டுகின்றனனர். 

இதுவரை 10 ஏக்கருக்கும் அதிகமான காடுகள் அழிக்கப்பட்டு தேயிலை கன்றுகள் நடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

வனாந்தரத்தில் 143 ஏக்கர் நிலத்திற்கு போலிக் காணி உறுதிப்பத்திரத்தை தயாரித்து இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் இப்பிரதேசத்திலுள்ள பிராணிகள், பறவைகள், மிருகங்கள் உட்பட அரிய பெறுமதிமிக்க மூலிகை மரங்கள் அழிந்து வரும் நிலைமை நிலவுவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

(இரத்தினபுரி நிருபர்)

No comments:

Post a Comment

Post Bottom Ad