விண்வெளி வீரர்களுக்கான புதிய உணவு முறையை கண்டுபிடித்தால் பரிசு - நாசா அறிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

விண்வெளி வீரர்களுக்கான புதிய உணவு முறையை கண்டுபிடித்தால் பரிசு - நாசா அறிவிப்பு

செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கான புதிய உணவு முறையை கண்டுபிடித்தால் 5 இலட்சம் டொலர் பரிசு வழங்கப்படும் என நாசா அறிவித்துள்ளது.

இந்நிலையில், போட்டியாளர்கள் செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்ய உள்ள விண்வெளி வீரர்களுக்கு அவர்களின் பயணத்தின் போது பொருத்தமான புதுமையான உணவுகளையும், அவற்றுக்கான தயாரிப்பு முறைகளையும் கண்டுபிடித்து கூற வேண்டும்.

வரும் மே மாதம் 28 வரை பெயரை பதிவு செய்து ஜூலை 30 க்குள் தங்களது கண்டுபிடிப்பு விவரங்களை தெரிவிக்க வேண்டும் என நாசா தெரிவித்துள்ளது.

ஆனால் அமெரிக்கர்களுக்கு மட்டுமே இந்த போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதர நாடுளை சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம், ஆனால் பரிசு கிடையாது.

ஏற்கனவே மிகவும் அதிக கலோரிகள் கொண்ட சாக்கலேட் பார்கள் விண்வெளி வீரர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்த சேலஞ்ச் இணையதளத்தில், நாசா குறிப்பாக மூன்று ஆண்டு சுற்று பயணத்தின் போது நான்கு விண்வெளி வீரர்களைக் கொண்ட ஒரு குழுவினருக்கு உணவளிக்கக்கூடிய உணவு உற்பத்தி முறையைத் தேடுவதாகக் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad