நைஜர் தேர்தல் ஆணையகத்தின் ஏழு உறுப்பினர்கள் குண்டு வெடிப்பில் உயிரிழப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, February 22, 2021

நைஜர் தேர்தல் ஆணையகத்தின் ஏழு உறுப்பினர்கள் குண்டு வெடிப்பில் உயிரிழப்பு

நைஜர் தேர்தல் ஆணையகத்தின் (CENI) ஏழு உறுப்பினர்கள் கண்டிவெடி குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

தேர்தல் அதிகாரிகள் பயணித்த வாகனம் நாட்டின் தென்மேற்கில் உள்ள தில்லாபெரி பகுதியில் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் கருவியின் மீது பயணித்தமையினால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

தேர்தல் அதிகாரிகள் பயணித்த வாகனம் வேண்டுமென்றே குறி வைக்கப்பட்டதா என்பது இதுவரை தெரியவில்லை என்பதுடன் இந்த சம்பவத்தில் மேலும் மூன்று ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.

1960 இல் பிரான்சிலிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் முதல் ஜனநாயக அதிகார மாற்றத்தைக் காணும் ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது சுற்றில் நைஜீரியர்கள் ஞாயிற்றுக்கிழமை வாக்களித்தனர்.

ஆளும் கட்சியின் முன்னாள் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சரான மொஹமட் பஸூம் முதல் சுற்றில் 40 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

அவரது போட்டியாளரான முன்னாள் ஜனாதிபதி, மகாமனே உஸ்மானே, முதல் சுற்றில் 17 சதவீதம் வாக்குகளை பெற்றார்.

நைஜர் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும், மேலும் சஹேலில் இஸ்லாமிய போராளிகளிடமிருந்து பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad