பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை நிராகரித்தார் பேராயர் - News View

Breaking

Post Top Ad

Monday, February 22, 2021

பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை நிராகரித்தார் பேராயர்

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்திப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையில் அந்த சந்திப்பினை பேராயர் நிராகரித்துள்ளார்.

எந்த அரசியல்வாதிகளும் தம்மை சந்திப்பதற்கு வரக்கூடாது என பேராயர் நேற்று தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதி தமக்கு கிடைக்கும் வரை எந்த அரசியல்வாதிகளையும் தாம் சந்திக்கத் தயார் இல்லை என பேராயர் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் மார்ச் 2ஆம் திகதி பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சந்திப்பதற்கு தீர்மானித்திருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள விசாரணை நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்கே அவர்கள் பேராயரை சந்திப்பதற்கு தீர்மானிக்கின்றனர். 

அதற்கிணங்க மார்ச் 2ஆம் திகதி மேற்படி சந்திப்பு இடம்பெறாது என பேராயரின் செயலாளர் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது. 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad