இலங்கையில் ஒரு வாகனம் கூட இல்லாத பொலிஸ் நிலையங்கள்! - News View

Breaking

Post Top Ad

Thursday, February 11, 2021

இலங்கையில் ஒரு வாகனம் கூட இல்லாத பொலிஸ் நிலையங்கள்!

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கையில் ஒரு வாகனம் கூட இல்லாத பொலிஸ் நிலையங்கள் 35 உள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போது தெரியவந்துள்ளது.

குறித்த 35 பொலிஸ் நிலையங்களும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தின் போது நிறுவப்பட்டுள்ளது. ஒரு வாகனம் கூட இல்லாத காரணத்தினால் தமது கடமைகளை சரிவர செய்வதற்கு முடியாமல் போயுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி காலத்தின்போது ஏனோ தானோ என்ற வகையில் பொலிஸ் நிலையங்கள் அமைத்துள்ளதாகவும், மேற்கூறப்பட்டுள்ள பொலிஸ் நிலையங்களும் அவ்வாறே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சரும் ஓய்வு பெற்ற ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த அந்த பொலிஸ் நிலையங்களை அகற்றி, அங்கு கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளை வெவ்வேறு பொலிஸ் நிலையங்களில் இணைக்கப்பட உள்ளனர்.

இது போன்ற காரணங்களால் தமது கடமைகளை மேற்கொள்வதற்கு அசெளகரியங்களை எதிர்கொள்ளும் பொலிஸ் நிலையங்களுக்கு கூடிய விரைவில் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகைள் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad