மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இங்கிலாந்து இளவரசர் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இங்கிலாந்து இளவரசர்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப் உடல்நிலை சரியில்லாமல் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இங்கிலாந்தின் 99 வயதான இளவரசர் பிலிப் உடல்நிலை சரியில்லாமல் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவர் செவ்வாய்க்கிழமை மாலை தனியார் கிங் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அரண்மனை தெரிவித்துள்ளது.

பிலிப்பின் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பிலிப் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எடின்பர்க் டியூக் என்றும் அழைக்கப்படும் பிலிப், 2017 இல் தனது பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெற்றார், பொது நிகழ்ச்சிகளில் அரிதாகவே கலந்து கொண்டார்.

இங்கிலாந்தின் தற்போதைய கொரோனா வைரஸ் ஊரடங்கில் போது, அவர் லண்டனுக்கு மேற்கே உள்ள வின்ட்சர் கோட்டையில் ராணியுடன் தங்கியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad