ஓட்டமாவடி - நாவலடி வீதி விபத்தில் ஏறாவூர் வியாபாரி பலி - News View

Breaking

Post Top Ad

Saturday, February 13, 2021

ஓட்டமாவடி - நாவலடி வீதி விபத்தில் ஏறாவூர் வியாபாரி பலி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்ளப்பு - கொழும்பு நெடுஞ்சாலையின் நாவலடிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வியாபாரியொருவர் பலியானதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை 14.02.2021 அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ஏறாவூர் ஜாமியுல் அக்பர் ஜும்மாப் பள்ளி குறுக்கு வீதியை அண்டி வசிக்கும் அஹமதுலெப்பை லாபீர் (வயது 62) எனும் 4 பிள்ளைளின் தந்தையே பலியானவராகும்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது இவர் வழமைபோன்று யாழ்ப்பாணத்திலிருந்து மடட்டக்களப்பு நோக்கி தனது படி ரக வாகனத்தில் வாழைப்பழக் குலைகளை ஏற்றிக் கொண்டு வரும்போது ஓட்டமாவடி நாவலடிப் பகுதியில் வாகனத்தை ஓரமாக்கி வீதிமருங்கில் சிறு நீர் கழித்துக் கொண்டிருந்துள்ளார்.

அவ்வேளையில் அவ்வீதியால் வந்துகொண்டிருந்த லொறி இவரை மோதித் தள்ளியுள்ளது.

படுகாயமடைந்த அவர் உதவிக்கு விரைந்தோரால் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டபோதும் அவரது உயிர் ஏற்கெனவே பிரிந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

இது விடயமாக விசாரணை நடத்தி வரும் பொலிஸார் விபத்தை உண்டாக்கிய லொறிச் சாரதியைக் கைது செய்துள்ளனர்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம் உடற் கூராய்வுப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad