பிரதமரிடம் கையளிக்கப்பட்டது பௌத்த உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை - News View

Breaking

Post Top Ad

Friday, February 12, 2021

பிரதமரிடம் கையளிக்கப்பட்டது பௌத்த உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை

(இராஜதுரை ஹஷான்)

அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தினால் தயாரிக்கப்பட்ட பௌத்த உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நாட்டின் தொல் பொருள் மரபுரிமைகளின் பெறுமதி தமிழ் மொழியிலான கல்வி முறைமையில் உள்ளடக்கப்பட வேண்டும் என நவ சிங்கள ராவய தேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுகத தேரர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

தேசிய மரபுரிமை தொடர்பான பாடநெறிகளை தமிழ் மொழி ஊடாக கல்வி முறைமைக்கு உள்ளடக்குவது குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புத்தசாசனம், மதம் மற்றும் கலைகலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கபில குணவர்தனவுக்கு ஆலோசனை வழங்கினார். 

பௌத்த மத உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படது.

2018ஆம் ஆண்டு பொசன் பௌர்ணமி நாளில் மிஹிந்தலையில் பௌத்த மத உரிமை ஆணைக்குழு ஸ்தாபிக்கப்ட்டது.

அவ்வாணைக்குழு இரண்டு வருட காலமான ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து அறிக்கை தயாரித்துள்ளனர்.

அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தின் தலைவர் பாலித ஜகத் சுமதிபால பிரதமரிடம் அறிக்கையை சமர்ப்பித்தார்.

இலங்கையின் பாரம்பரிய உரிமைகள் அனைத்து இன மக்களுக்கும் பொதுவானது ஆகவே தொல் பொருள் மரபுரிமைகளின் பெறுமதியை தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். 

ஆகையால் தொல் பொருள் மரபுரிமை தமிழ் மொழி ஊடான கல்வி முறைமையிலும் உள்வாங்கப்பட வேண்டும் என மாகல்கந்தே சுகத தேரர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

இவ்விடயம் குறித்து ஆராயுமாறு புத்தசாசனம், மதம் மற்றும் கலைகலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad