அரசியல் காரணங்களுக்காக இதுவரை சீர் செய்யப்படாத பாலம் : உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை - News View

Breaking

Post Top Ad

Friday, February 12, 2021

அரசியல் காரணங்களுக்காக இதுவரை சீர் செய்யப்படாத பாலம் : உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை

கடந்த சுனாமியில் முற்றாக பாதிக்கப்பட்ட கல்முனை மக்களை மீள்குடியேற்ற உருவாக்கப்பட்ட கிரீன் பீல்ட் சுனாமி வீட்டுத் திட்டத்தின் முன்னால் உள்ள பாலம் பல வருடங்களாக சேதமாகி பாவனைக்கு உதவாத வகையில் இருக்கிறது.

இது தொடர்பில் அரச உயரதிகாரிகள் பிராந்திய அரசியல்வாதிகளிடம் பல தடவைகள் சுட்டிக்காட்டியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பல ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பாவிக்கும் இந்த பாலமே கிரீன் பீல்ட் மக்களையும் ஏனைய ஊரையும் இணைக்கும் பாதையாக உள்ளது. 

இந்த பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவது வழக்கமாகி வருகிறது.

அரசியல் காரணங்களுக்காக இந்த பாலம் இதுவரை சீர் செய்யப்படவில்லை என்றும். உடனடியாக இந்த பாலத்தை சீரமைத்து தருமாறும் பொதுமக்கள் சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக் கொள்கின்றனர்.

மாளிகைக்காடு நிருபர் - நூருள் ஹுதா உமர்

No comments:

Post a Comment

Post Bottom Ad