மட்டக்களப்பு மாவட்ட விசேட காணி மத்திஸ்த சபையுடன் இணைந்து லிப்ற் நிறுவனம் செயற்படுத்திய நடமாடும் சேவை - News View

Breaking

Post Top Ad

Sunday, February 21, 2021

மட்டக்களப்பு மாவட்ட விசேட காணி மத்திஸ்த சபையுடன் இணைந்து லிப்ற் நிறுவனம் செயற்படுத்திய நடமாடும் சேவை

எஸ்.எம்.ம்.முர்ஷித் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர்ப்பற்று, பட்டிப்பளை, வாகரை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள மக்களிடம் காணப்படும் காணி சம்மந்தமான பிணக்குகளை சுமுகமாகவும் விரைவாகவும் தீர்ப்பதற்கான திட்டத்தினை நீலன் திருச்செல்வம் நம்பிக்கை நிதியத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்ட விசேட காணி மத்திஸ்த சபையுடன் இணைந்து லிப்ற் நிறுவனம் செயற்படுத்துகிறது.

இத்திட்டத்தின் ஓர் செயற்பாடாக கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட வாகரை வடக்கு கிராம சேவகர் காரியாலயத்தின் மண்டபத்தில் காணி பிணக்குகள் தொடர்பான விழிப்புணர்வுடன் நடமாடும் சேவையும் நடாத்தப்பட்டது.

கிராம சேவையாளர் தலைமையில் ஓழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட காணி விசேட மத்திஸ்த சபையின் தவிசாளர் கதிர்காமத்தம்பி குருநாதன் மற்றும் காணி விசேட மத்திஸ்த சபையின் உறுப்பினரான முகமட் முஸ்தபா ஆகியோர் மக்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்கினர்.

அத்துடன் நடமாடும் சேவையினுடாக முறைப்பாட்டாளர்களிடம் இருந்து பிணக்குகள் தொடர்பான விண்ணப்பங்களும் பெறப்பட்டது.
இந்நிகழ்வில் லிப்ற் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக ஊக்குவிப்பாளார் ஆகியோர் பங்கு கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad