எப்.எஸ்.கே மியன்டாட் பிரீமியர் லீக் சாம்பியன் பட்டம் போலிலயன்ஸ் வசமானது !! - News View

Breaking

Post Top Ad

Sunday, February 21, 2021

எப்.எஸ்.கே மியன்டாட் பிரீமியர் லீக் சாம்பியன் பட்டம் போலிலயன்ஸ் வசமானது !!

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டு கழகத்தின் எப்.எஸ்.கே. மியன்டாட் பிரீமியர் லீக் கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதியாட்டத்தில் மாளிகா ஜூனைடட் அணியை இறுதி நிமிடத்தில் வீழ்த்தி போலிலயன்ஸ் அணி சம்பியனானது.

சனிக்கிழமை மாலை சாய்ந்தமருது பொலிவேரியன் ஹிஜ்ரா மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மாளிகா ஜூனைடட் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 10 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை குவித்தது. 126 எனும் வெற்றியிலக்கை நோக்கி துட்டுப்படுத்தாடிய போலிலயன்ஸ் அணி ஆரம்ப வீரர்கள் சிறப்பாக துட்டுப்படுத்தாடினாலும் மறுமுனையில் விக்கட்டுக்கள் சரிந்து கொண்டே இருந்தது. 

இறுதி ஓவரில் 126 எனும் வெற்றியிலைக்கை அடைந்து எப்.எஸ்.கே. மியன்டாட் பிரீமியர் லீக் கிரிக்கட் சுற்றுப் போட்டியின் சாம்பியன் பட்டத்தை போலிலயன்ஸ் அணி தட்டிக்கொண்டது.

போட்டியின் ஆட்டநாயகன் விருதை போலிலயன்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஏ.கே.எம். பஸாலும் தொடர் நாயகன் விருதை முஹம்மட் றிஸ்னியும் தட்டிச்சென்றனர். இந்த சுற்றுத்தொடரின் மூன்றாம் இடத்தை மருதூர் வோரியர்ஸ் அணியும், நான்காம் இடத்தை சாந்தம் சலேஞ்சர்ஸ் அணியும் பெற்றுக்கொண்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad