பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் உள்ளிட்ட 7 பேருக்கு அழைப்பாணை - News View

Breaking

Post Top Ad

Saturday, February 13, 2021

பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் உள்ளிட்ட 7 பேருக்கு அழைப்பாணை

பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம், த.கலையரசன் உள்ளிட்ட எழுவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 திகதி ஆஜராகுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொள்வார்கள் என கூறி கல்முனை பொலிஸ் நிலையத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 29 பேருக்கு கல்முனை நீதிமன்ற உத்தரவின் பேரில் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.

எனினும் பேரணி இடம்பெற்றதுடன் நீதிமன்ற தடை உத்தரவினை மீறி நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டவர்கள் என பெயரிடப்பட்டவர்கள் சிலர் மீறி கலந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எழுவருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று கல்முனை பொலிஸாரினால் கடந்த 05 ஆம் திகதி அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த வழக்கு இடம்பெற்றதுடன் நீதிமன்ற தடையுத்தரவை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம், த.கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், மாணவர் மீட்பு பேரவை தலைவர் செ.கணேசானந்தன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ.நிதான்சன் ஆகியோருக்கு நீதிமன்ற அழைப்பாணையானது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment

Post Bottom Ad