தங்க நகைகளை விற்பதாகக் கூறி பண மோசடி - பெண் உட்பட 6 பேர் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

தங்க நகைகளை விற்பதாகக் கூறி பண மோசடி - பெண் உட்பட 6 பேர் கைது

(எம்.மனோசித்ரா)

தங்க நகைகளை விற்பதாகக் கூறி நபர்களை வரவழைத்து அவர்களிடமிருந்து பணத்தை கொள்ளையிட்டமை தொடர்பில் குருணாகல் குற்ற விசாரணை பிரிவினரால் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொரட்டுவை, கடுவலை, ராகம மற்றும் வேயங்கொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சந்தேகநபர்கள் நேற்றையதினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து காரொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த 6 சந்தேகநபர்களில் 47 வயதுடைய ராகம பிரதேசத்தை சேர்ந்த பெண்னொருவரும் உள்ளடங்குகின்றார்.

குறித்த பெண் தொலைபேசியூடாகவும், சமூக வலைத்தளங்களுடாகவும் தங்க நகைகள் விற்பனைக்கு உள்ளதாகத் தெரிவித்து புகைப்படங்களை அனுப்பி ஏனையோரை தொடர்பு கொண்டுள்ளார். அத்தோடு ஒரு கிலோ தங்கம் 93 இலட்சத்துக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.

இதன் போது நகைகளை கொள்வனவு செய்ய வருபவர்களிடமிருந்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. குருணாகல் குற்ற விசாரணை பிரிவு இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad