பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் 635 தீர்மானங்கள், 40 பிரேரணைகள் நிறைவேற்றம் - News View

Breaking

Post Top Ad

Saturday, February 13, 2021

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் 635 தீர்மானங்கள், 40 பிரேரணைகள் நிறைவேற்றம்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் சபை ஆரம்பிக்கப்பட்ட 2018 ஏப்ரல் மாதம் தொடக்கம் 31.12.2020 வரையான காலத்தில் 635 தீர்மானங்களும், 40 பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளனர்.

வடக்கில் உள்ள பல உள்ளுராட்சி மன்றங்கள் தங்களின் கடமைகள் பொறுப்புக்களுக்கு அப்பால் பிரேரணைகள் தீர்மானங்கள் நிறைவேற்றுவதனையே பிரதான செயற்பாடாக கருதி பிரதேச சபைகளின் வரையறைகளுக்குப் அப்பால் சென்று தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர். 

பிரதேச சபைகள் போட்டி போட்டுக் கொண்டு இவற்றை நிறைவேற்றி வருவதாக பொதுமக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களில் பெரும்பாலானவை நடைமுறைப்படுத்த முடியாதவையாக காணப்படுகிறது. 

இந்த நிலையில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் தாம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 625 தீர்மானங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், பிரேரணைகளில் 33 பிரேரணைகளை நடைமுறைப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad