பதுளையில் இருவருக்கு கொரோனா - 60 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

பதுளையில் இருவருக்கு கொரோனா - 60 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

பதுளை நகரின் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளருக்கும் அங்கு கடமையாற்றிய காசாளருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பதுளை பொது சுகாதார பரிசோதகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

கடந்த 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனையின் போதே மேற்படி இவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களுடன் தொடர்பை பேணிய 60 பேர் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கும் பீ.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தொற்றாளர்கள் இருவரையும் பண்டாரவளை, காஹாகொல்லையிலுள்ள சிகிச்சை நிலையத்திற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை பதுளை கொரோனா தடுப்பு பிரிவினர் பதுளையில் கொரோனா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad