இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Saturday, February 13, 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 143 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகின்ற நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரத்தை இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 143 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 11,395 பேர் குணம் அடைந்துள்ளனர். ஒரே நாளில் 103 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 8 இலட்சத்து 92 ஆயிரத்து 746 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 6 இலட்சத்து 625 ஆக காணப்படுகின்றது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 550 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 571 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 79 அலட்சத்து 67 ஆயிரத்து 647 ஆக உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad