மாநகர சபையை நடத்த முடியாத TNA மாகாண சபையை கேட்கிறது, 9 மாகாணங்களுக்கும் அதிகாரங்களை பிரித்து கொடுத்தால் மத்தியில் ஆட்சி எதற்கு? என்கிறார் சரத் வீரசேகர - News View

About Us

About Us

Breaking

Sunday, January 3, 2021

மாநகர சபையை நடத்த முடியாத TNA மாகாண சபையை கேட்கிறது, 9 மாகாணங்களுக்கும் அதிகாரங்களை பிரித்து கொடுத்தால் மத்தியில் ஆட்சி எதற்கு? என்கிறார் சரத் வீரசேகர

“ஒரு நாடு ஒரு சட்டம்” என்ற கொள்கையுடன் ஜனாதிபதி செயற்படுகிறார். புதிய அரசிலமைப்பில் மாகாண சபை முறைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதிகாரங்கள் அனைத்தும் மத்தியில் இருக்க வேண்டும். அதை ஒன்பது மாகாணங்களுக்கு பிரித்துக் கொடுத்தால் மத்தியில் ஆட்சி எதற்கு என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபை ஆட்சியில் அந்தச் சபையை சீரழித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அந்த மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் இருந்த போதிலும் அவர்களுக்குள் ஒற்றுமை இருக்கவில்லை. ஒரு பக்கம் உப்புச் சப்பற்ற தீர்மானங்கள் நிறைவேற்றினர். மறுபக்கம் ஊழல் மோசடிகள் தலைவிரித்தாடின. இதுதான் கூட்டமைப்பின் ஆட்சியின் விசித்திரமாகும்.

கையில் கிடைத்த ஒரு மாநகர சபை ஆட்சியையே நடத்த தெரியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மாகாண சபை முறைமை வேண்டுமென்று கோருவது வேடிக்கையானதென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வை கோரி நிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், மாகாண சபை முறைமையிலான அதிகாரப் பகிர்வையும் வேண்டி நிற்கின்றனர். இது இரண்டும் அறவே வேண்டாமென்பதே எனது நிலைப்பாடு.

மாநகர சபையில் ஆட்சி நடத்தத் தெரியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை முறைமை வேண்டுமென்று கூறுவது வேடிக்கையானது.

வடக்கில் ஒரே ஒரு மாநகர சபை யாழ்ப்பாண மாநகர சபை. அந்த சபையை கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமக்குள் முட்டிமோதி மூன்று வருடங்கள் நிறைவடைவதற்குள் அதை இழந்துள்ளனர். 

ஒரு மாநகர சபையைக் கூட ஒற்றுமையாக ஆட்சி நடத்தக் கூடிய பக்குவம் தமிழ் கூட்டமைப்பினரிடம் இல்லையென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment