மட்டக்களப்பில் மூன்று குளங்களின் வான் கதவுகள் திறப்பு - மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் - News View

Breaking

Post Top Ad

Monday, January 11, 2021

மட்டக்களப்பில் மூன்று குளங்களின் வான் கதவுகள் திறப்பு - மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

மட்டக்களப்பில் உன்னிச்சை, நவகிரி, றுகம், ஆகிய குளங்களின் வான் கதவுகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நடராசா நாகரெட்ணம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதையடுத்து குளங்களில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

இதனால், உன்னிச்சை குளத்தின் மூன்று வான் கதவுகள் ஐந்து அடி உயரத்துக்கும், நவகிரி குளத்தின் இரண்டு வான் கதவுகள் ஐந்து அடி உயரத்துக்கும், றூகம் குளத்தின் இரண்டு வான் கதவுகள் எட்டு அடி உயரத்துக்கும் திறந்து விடப்பட்டுள்ளது.

உன்னிச்சை குளம் 33 அடியும், நவகிரி குளம் 31 அடியும், றுகம் குளம் 15 அடி 18 அங்குலம் நீர் கொள்ளவுள்ள குளங்களாகக் காணப்படுகின்றன.

இருந்தபோதும், குளத்தின் நீர் மட்டம் உயர்ந்து வருவதையடுத்து தேவையற்ற நீரை வெயளியேற்ற வேண்டியதையடுத்து இந்த குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நடராசா நாகரெட்ணம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த குளங்களுக்கு அருகிலும், தாழ்நிலப் பகுதிகளிலும் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad