புற்று நோயை ஆரம்பத்திலேயே அறிந்து கொள்ள பயன்படுத்தப்படும் கதிரியக்க மருந்துகளை இலங்கையில் தயாரிக்க திட்டம் - News View

Breaking

Post Top Ad

Monday, January 11, 2021

புற்று நோயை ஆரம்பத்திலேயே அறிந்து கொள்ள பயன்படுத்தப்படும் கதிரியக்க மருந்துகளை இலங்கையில் தயாரிக்க திட்டம்

புற்று நோயை ஆரம்பத்திலேயே அறிந்து கொள்வதற்காக பயன்படுத்தப்படும் கதிரியக்க மருந்துகளை இலங்கையில் உற்பத்தி செய்வதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது இலங்கையில் நிகழும் மரணங்களுக்கு முக்கிய காரணமாக தொற்றா நோயான புற்று நோய் காணப்படுகின்றது.

புதிய கணக்கீடுகளின் படி 2018 ஆம் ஆண்டில் புற்று நோயாளர்களாக 23,530 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 14,013 பேர் மரணித்துள்ளனர்.

நாளாந்தம் இலங்கையில் 64 புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இவர்களுள் 38 பேர் மரணிக்கின்றனர். புற்று நோயை அதன் ஆரம்பத்திலேயே அறிந்து கொண்டால் அதற்கு சிகிச்சையளித்து குணமாக்க முடியும்.

புற்று நோயை ஆரம்பத்தில் Positron Emission Tomography Scan மூலம் அடையாளம் காண முடியும். இதன் மூலம் கதிரியக்க மருந்தை உடம்பில் செலுத்தி புற்று நோய் பரவுவதை அறிந்து கொள்ள முடியும்.

PET அறிக்கையொன்றை பெற்றுக் கொள்வதற்காக நோயாளிக்கு Fluro - Deoxy என்ற ஊசி மூலம் அடையாளம் காணப்படுகின்றது. இந்த மருந்து கதிரியக்க செயற்பாட்டில் குறுகிய காலத்திற்கே இருக்கும்.

அதாவது இந்த மருந்தில் உள்ள கதிரியக்க மூலப்பொருள் F18 என்பதனால் 110 நிமிடங்களுக்கு கதிரியக்க செயற்பாடு இடம்பெறும். அதன் பின்னர் பயன்படுத்த முடியாத வகையில் இதன் செயற்பாடு குறைவடையும்.

தற்பொழுது இலங்கை அரசாங்கத்தின் 2 வைத்தியசாலைகளிலும், ஒரு தனியார் வைத்தியசாலையிலும் மாத்திரம் PET வசதி உண்டு.

கதிரியக்க மருந்தை தேசிய ரீதியில் உற்பத்தி செய்வதற்கு தேவையான சயிக்லோரோன் என்ற கருவி நாட்டில் இல்லை என்பதனால் இந்த கதிரியக்க மருந்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.

தற்பொழுது அரசாங்கம் மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் வருடாந்தம் சுமார் 100 மில்லியன் ரூபாவை செலவிட்டு இந்தியாவில் இருந்து மருந்தை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. அத்தோடு இதன் கதிரியக்கம் குறைவடைவதனால் 97 சதவீத அளவிலான மருந்து வீண் விரயமாகின்றது. 

தற்போதைய நிலைமைக்கு மத்தியில் நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு இந்த சேவையைப் பெற்றுக் கொள்ளும் வகையில் FDG மருந்தை இலங்கையில் தயாரிப்பதற்கு இலங்கை அனுசக்தி சபை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் அதனுடன் இணைந்ததாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் இந்த மருந்தை உற்பத்தி செய்வதற்காக இலங்கையில் சயிக்லோரோன் என்ற உபகரணம் அமைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 13 ஆம் திகதி இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad