நீதி அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 27, 2021

நீதி அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

நாட்டில் நீதியை நிலைநாட்டுவதற்காக இயங்கி வரும் நீதிமன்றங்களில் அதிகளவு வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. அதற்குத் தீர்வாக நீதிமன்ற நீதவான்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நீதிமன்றங்களின் ஏனைய வசதிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியதுடன், எதிர்வரும் 03 வருடங்களில் புதிய 100 நீதிமன்ற கூடங்களை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

அதன்கீழ், பலமாடி நீதிமன்றக் கட்டடத் தொகுதியை அமைப்பதற்கும் தற்போது காணப்படுகின்ற கட்டடங்களை திருத்தியமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நீதிமன்றக் கட்டிடங்களை நிர்மாணிக்கும் அனுபவங்களைக் கொண்ட பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய பணியகத்திடமிருந்து தேவையான ஆலோசனை சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக நீதி அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment