மரண தண்டனையை கைவிட்டது கஸகஸ்தான் - சாசனத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி - News View

Breaking

Post Top Ad

Monday, January 4, 2021

மரண தண்டனையை கைவிட்டது கஸகஸ்தான் - சாசனத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி

கஸகஸ்தானில் மரண தண்டனை நிரந்தரமாய்க் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஜனாதிபதியின் இணையத்தளத்தில், அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

கஸகஸ்தான் ஜனாதிபதி காசிம் - ஜோமார்ட் தொக்காயேவ், மரண தண்டனையைக் கைவிடக் கோரும் சாசனத்தில் கையெழுத்திட்டார்.

ஏற்கனவே கஸகஸ்தானில், மரண தண்டனை 2003ஆம் ஆண்டிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது அது நிரந்தரமாகக் கைவிடப்படுகிறது.

இருப்பினும் பயங்கரவாதம் உள்ளிட்ட சில கடுமையான குற்றங்களுக்கு மட்டும், அந்நாட்டு நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்து வந்தன.

இதன்படி 2016 ஆம் ஆண்டு கஸகஸ்தானின் மிகப்பெரிய நகரான அல்மட்டியில் துப்பாக்கிச் சூட்டில் எட்டு பொலிஸார் மற்றும் இரு பொதுமக்களை கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ருஸ்லான் குல்பெயேவின் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.

இவர் மாத்திரமே அந்நாட்டில் மரண தண்டனையை எதிர்கொண்ட ஒரே கைதியாக இருந்தார். இதன்படி பிராந்தியத்தில் தொடர்ந்தும் மரண தண்டனையை நிறைவேற்றும் ஒரே நாடாக பெலாரஸ் உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad