பாராளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை அமெரிக்காவின் இருண்ட நாட்களில் ஒன்று - ஜோ பைடன் - News View

Breaking

Post Top Ad

Thursday, January 7, 2021

பாராளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை அமெரிக்காவின் இருண்ட நாட்களில் ஒன்று - ஜோ பைடன்

பாராளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை அமெரிக்காவின் இருண்ட நாட்களில் ஒன்று என ஜனாதிபதியாக தேர்வான ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அபார வெற்றி பெற்றார்.

ஆனால், இந்த வெற்றியை டிரம்ப் ஏற்கவில்லை. தேர்தலில் மோசடிகள் நடந்ததாக குற்றம்சாட்டி அவரும், அவரது ஆதரவாளர்களும் போட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் செல்லுபடியாகவில்லை.

இதற்கிடையே, அமெரிக்க பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட டிரம்ப் ஆதரவாளர்கள் யாரும் எதிர்பாராத வகையில் வன்முறையில் இறங்கினர். முன் எப்போதும் நடந்திராத இந்த வன்முறை உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பாராளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை அமெரிக்காவின் இருண்ட நாட்களில் ஒன்று என ஜனாதிபதியாக தேர்வான ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க பாராளுமன்றத்தில் நுழைந்து டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை ஏற்கத்தக்கதல்ல. இது அமெரிக்காவின் இருண்ட நாட்களில் ஒன்று.

நேற்று நடந்த சம்பவம் கருத்து வேறுபாடு இல்லை. இது ஒரு மோசமான நிகழ்வு. அவர்கள் எதிர்ப்பாளர்கள் இல்லை. அப்படி அழைக்க நாம் துணிய வேண்டாம். அவர்கள் ஒரு கலகக்கார கும்பல். கிளர்ச்சியாளர்கள். உள்நாட்டு பயங்கரவாதிகள் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad