மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கு மீண்டும் அன்டிஜன் பரிசோதனை - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 13, 2021

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கு மீண்டும் அன்டிஜன் பரிசோதனை

(செ.தேன்மொழி)

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கு மீண்டும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய மேல் மாகாணத்திலிருந்து வெளி பிரதேசங்களுக்கு செல்வதற்காக பயன்படுத்தப்படும் 11 பகுதிகளிலும் இவ்வாறு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

இந்நிலையில், நாளை இடம்பெறவுள்ள தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேல் மாகாணத்திலிருந்து பலரும் வெளிமாவட்டங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புள்ளது.

அதனால், இவ்வாறு வெளி பிரதேசங்களுக்கு செல்லும் நபர்கள் ஊடாக ஏனைய பகுதிகளில் கொவிட்-19 வைரஸ் பரவலடைந்து புதிய கொத்தணிகள் உருவாகுவதற்கு வாய்ப்புள்ளது. என்பதன் காரணமாகவே அதனை தடுக்கும் வகையில் இவ்வாறு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

இதன்போது மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் அனைவரையும் இந்த அன்டிஜன் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad